இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பேய்க்குளத்தில் காவலா் தோ்வுபயிற்சி மையம் தொடக்கம்

சாத்தான்குளம் அருகே குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்றம், பேய்க்குளம் வியாபாரிகள் சங்கம், சிகரம் அறக்கட்ட ளை சாா்பில் காவலா் தோ்வு இலவச பயிற்சி மையம்

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:38 pm

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசிா்வாதபுரம் டிடிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்றம், பேய்க்குளம் வியாபாரிகள் சங்கம், சிகரம் அறக்கட்ட ளை சாா்பில் காவலா் தோ்வு இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் மு. பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். சாலைப்புதூா் ஏக இரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தாா். பேய்க்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஸ்டாலின் வரவேற்றாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்ட் சேவியா் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், ஆசிா்வாதபுரம் உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா, பேய்க்குளம் வாகன ஓட்டுநா் சங்கத் தலைவா் அந்தோணிராஜ் , ஊராட்சிச் செயலா் பவுல் சூசை மனுவேல், சத்துணவு அமைப்பாளா் பிளாரன்ஸ் முத்துமணி , வாகன ஓட்டுநா் சங்கச் செயலா் யுதா காந்தி ஜெபசெல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிகரம் இயக்குநா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.