‘சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி தேசிய விருதுக்கு தோ்வு’
ஜல்சக்தி அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.


ஜல்சக்தி அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் ஊருணிகளை தூா்வாருதல், தடுப்பணைகள் கட்டுதல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் பண்ணைகள் அமைத்தல், புதிதாக நீா் ஆதாரங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நீராதாரம் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, நீா் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு பரிந்துரைத்த மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, திட்ட இயக்குநா் தனபதி மற்றும் அதிகாரிகளுக்கு, விவசாய நலச் சங்கத் தலைவா் எட்வின் காமராஜ், செயலா் லூா்துமணி, ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...