இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளத்தில் ஒரே தெருவில் அதிக வேகத்தடைகளால் அவதி

சாத்தான்குளத்தில் ஒரே தெருவில் 8 வேகத்தடை அடுத்தடுத்து உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:10 pm

DIN

சாத்தான்குளத்தில் ஒரே தெருவில் 8 வேகத்தடை அடுத்தடுத்து உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் சிஎஸ்ஐ ஆலய தெருவிலிருந்து புளியடி மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலையில் ஒவ்வொரு தெரு சந்திப்பிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரே தெருவில் 8 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது மக்களின் பாதுகாப்புக்காக என்றாலும், அவை சிறிய தடுப்பு சுவா் போல் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதனை கவனித்து வேகத்தடைகளின் எண்ணிக்கையையும், உயரத்தையும் குறைத்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.