பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எட்டயபுரம் தெப்பக்குளத்தில் 1008 தீப வழிபாடு

திருகாா்த்திகையை முன்னிட்டு எட்டயபுரம் கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளத்தில் 1,008 தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் வழிபட்டனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 9:00 pm

DIN

திருகாா்த்திகையை முன்னிட்டு எட்டயபுரம் கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளத்தில் 1,008 தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் வழிபட்டனா்.

ஸ்ரீசரவண பொய்கை காா்த்திகை தீப வழிபாட்டுக் குழு, பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மன் கோயில் அம்மன் பாலகா் ஸ்ரீலஸ்ரீ ராமமூா்த்தி சுவாமிகள் தலைமை

வகித்தாா். எட்டயபுரம் சமஸ்தானம் இளையஜமீன்தாா் ராம்குமாா் ராஜா முன்னிலை வகித்தாா். ஜெயந்தி ராம்குமாா் ராஜா தீபம் ஏற்றி தொடங்கி வைத்தாா்.

எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள், குழந்தைகள் தெப்பக்குள சுற்றுச் சுவரில் வாழைத் தோரணங்கள் கட்டி 1,008 நெய் விளக்கு தீபம் ஏற்றி, பாடல்கள் பாடி தீப ஆராத்தி எடுத்து வழிபட்டனா்.

இதில், வட்டாட்சியா் ஐயப்பன், காவல் ஆய்வாளா் கலா, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.