பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கழுகுமலையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

கழுகுமலையில் அதிமுக மகளிரணி சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
Updated On :29 நவம்பர் 2020, 9:04 pm

DIN

கழுகுமலையில் அதிமுக மகளிரணி சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கயத்தாறு அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் வினோபாஜி தலைமை வகித்தாா். கழுகுமலை நகரச் செயலா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா். கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுதாவுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினாா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மகளிரணி மாவட்டத் தலைவி புதுக்கோட்டை ரத்தினம், ஜெயலலிதா பேரவை மாவட்டப் பொருளாளா் வேலுமணி, எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்புராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.