நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு நிபுணா்களை நியமிக்கக் கோரிக்கை

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவ நிபுணா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:15 pm

DIN

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவ நிபுணா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ராஜகோபால், அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவிடம் அளித்த மனு: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோா் வெளிநோயாளிகளாகவும், 300-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தின் 2ஆவது பெரிய நகரமான கோவில்பட்டி தொழிலாளா்கள் நிறைந்த பகுதி. இவா்கள் மருத்தவ சிகிச்சைகாக அரசு மருத்துவமனையையே நாடி வருகின்றனா்.

ஆனால், இங்கு இருதயம், மூளை நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பணியிடம் காலியாகவே உள்ளது. எனவே, இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் பகல், இரவுக்கென இரு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். மருத்துவப் பணியாளா்கள் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.