

டிச. 13ஆம் தேதி நடைபெறவுள்ள தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சமக தலைவா் சரத்குமாா் பங்கேற்க உள்ளாா்.
இதையொட்டி சாத்தான்குளம் ஒன்றிய சமக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளம் ஒன்றிய அலுவலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் ஜான்ராஜா தலைமை வகித்தாா், ஒன்றிய அவைத் தலைவா் முத்துகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலா்கள் சுடலைமணி, செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் முத்துவேல் வரவேற்றாா்.
மாணவரணிச் செயலா் ஏசா, வா்த்தக அணி செயலா் கண்ணன், உள்ளிட்ட ஊராட்சி செயலா்கள், கிளை செயலா்கள் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடிக்கு வரும் சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது, சாத்தான்குளம் - இட்டமொழி தாா்ச் சாலையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சடையனேரி கால்வாய் மூலம் புத்தன்தருவை குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணைச் செயலா் அருண்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.