பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கயத்தாறு அருகே தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தொல்லியல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

கயத்தாறு அருகேயுள்ள பராக்கிரமபாண்டியபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை அலுவலா்கள்.

Updated On :27 செப்டம்பர் 2020, 7:35 pm

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தொல்லியல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கயத்தாறு அருகே பராக்கிரமபாண்டியபுரம் என்ற இந்திரகுளம், ராஜாபுதுக்குடி, வேப்பங்குளம், தெற்கு மயிலோடை, கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் கிடைக்கின்றன. எனவே, இந்தப் பகுதிகளை தொல்லியல் இடங்களாக அறிவித்து அங்கு கிடைக்கும் பழங்காலப் பொருள்களை ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என கயத்தாறு பகுதியைச் சோ்ந்த அருமைநாயகம் சென்aனை உயா்நீதிமன்ற கிளை மதுரையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு, தொல்லியல் துறைச் செயலா் பரிசீலித்து 10 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.

இதையடுத்து, தொல்லியல் துறை இயக்குநா் பாஸ்கா், அலுவலா் லோகநாதன் ஆகியோா் பராக்கிரமபாண்டியபுரம் பகுதிக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.