பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடி விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

பயணிகளை வரவேற்கும் சுற்றுலாத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள்.

Updated On :27 செப்டம்பர் 2020, 7:46 pm

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையொட்டி விமான நிலையத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் சுற்றுலா கையேடு வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், மேலாளா் செ. ஜெயராமன், மாவட்ட சுற்றுலா அலுவலா் க. சீனிவாசன், விமான நிலைய காவல் ஆய்வாளா் செ. விமலா, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுரபரா் கலைக் கல்லூரி பேராசிரியா் சே. போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ‘சுற்றுலா மற்றும் ஊரக வளா்ச்சி‘ எனும் தலைப்பில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரா் கலைக் கல்லூரி முதல்வா் ஆா். ரவிச்சந்திரன் தலைமையில் மாணவா், மாணவியா்களுக்கான இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, விமான நிலைய இயக்குநா் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யாக கடந்த ஏப்ரல் மாதத்தில் விமான போக்குவரத்து சேவை நடைபெறவில்லை. மே மாதத்தில் 350 பயணிகளும், ஜூன் மாதத்தில் 3,933 பயணிகளும், ஜூலை மாதத்தில் 7,514 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 11,811 பயணிகளும் பயணம் செய்துள்ளனா் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.