புன்னைக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா
ஆத்தூா் அருகே புன்னைக்காயல் தூய ராஜகன்னிமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.


ஆத்தூா் அருகே புன்னைக்காயல் தூய ராஜகன்னிமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
புன்னைக்காயலில் பிரசித்தி பெற்ற தூய ராஜகன்னிமாதா ஆலயத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்கள் நோ்ச்சைக் கொடிகளை ஆலயத்தில் வைத்து வணங்கினா்.
பின்னா் ஆலய கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு புன்னைக்காயல் பங்குத் தந்தை பிராங்ளின் பா்னாண்டோ, அமலிநகா் பங்குத் தந்தை ரவீதிரன் அடிகளாா், கூட்டாம்புளி பங்குத் தந்தை ரஞ்சித்குமாா் கா்டோஸ் ஆகியோா் திருவிழா கொடியை ஏற்றினா். இதையடுத்து ஆலய வளாகத்தில் திருப்பலி நடைபெற்றது.
திருவிழா நாள்களில் காலையில் திருப்பலி, நவ நாள் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுரை மற்றும் நற்கருனை ஆசீா் ஆகியன நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் புனித அன்னம்மால் திருவிழா திருப்பலி நடைபெற்றது.
வரும் அக். 2ஆம் தேதி காலை 7.30 மணிக்கு புதுநன்மை விழாத் திருப்பலி, மாலை 6.30 நற்கருனை பவனி ஆகியவை நடைபெறும். அக். 3 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறும். இரவு அன்னையின் திரு உருவ தோ்பவனி நடைபெறும். 4ஆம் தேதி திருவிழா நாளில் காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு புனித மிக்கேல் அதி தூதா் திருவிழா, மாலை ஆராதனை மற்றும் இரவு சப்பர பவனி ஆகியவை நடைபெறும். அக். 5 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீா் மற்றும் கொடியிறக்கம் ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை பங்குத் தந்தை, பங்குமக்கள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...