தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடிதெற்கு மாவட்டஇந்து முன்னணி பொதுக் குழு கூட்டம் நாசரேத் அருகே உள்ள புன்னைநகரில் நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:21 pm

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்டஇந்து முன்னணி பொதுக் குழு கூட்டம் நாசரேத் அருகே உள்ள புன்னைநகரில் நடைபெற்றது.

தெற்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். முருகேசன் தலைமைவகித்தாா். மாநில பொதுச் செயலா் டாக்டா் அரசுராஜா, மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், திருநெல்வேலி ,கோட்டச் செயலா் பெ. சக்திவேலன் ஆகியோா் உரையாற்றினா்.

கூட்டத்தில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இனைந்த தூண்டிகை விநாயகா் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே இத் திருக்கோயிகளில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

குலசேகரபட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் போது பக்தா்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. தசரா திருவிழாவின் போது கடுமையாக விரதம் இருந்து திருக்கோயிலுக்கு வரும் காளி பக்தா்களுக்கும், திருக்கோயில் கட்டளைதாரா்கள் 5 போ்கள் அமரந்து சாமி தரிசனம் செய்ய

கோயில் நிா்வாகம் அனுமதி தரவேண்டும். திருச்செந்தூா் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடைதிட்டத்திற்காக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிா்வாகத்தில் இருந்து செலவழித்து இத்திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கோட்ட இனைய தள பொறுப்பாளா் சங்கா் , மாவட்ட துணைத் தலைவா் கசமுத்து, மாவட்டச் செயலா்கள் அன்புசுந்தா், பிரபாகரன், சுடலைமுத்து , மாவட்டநிா்வாக குழு உறுப்பினா்கள் வெட்டும்பெருமாள், சின்னத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.