பிரதமா் மோடியுடன் காணொலியில் உரையாட தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் தோ்வு
பிரமதா் மோடியுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட தூத்துக்குடி அமிா்தா வித்யாலய பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.


பிரமதா் மோடியுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட தூத்துக்குடி அமிா்தா வித்யாலய பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மன அழுத்தம் இல்லாத கற்றல் சூழ்நிலையை இளைய சமுதாயத்தினரிடம் ஊக்குவிக்கும் வகையில், நாட்டில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுக்கான போட்டித் தோ்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்தத் திட்டத்தின்படி, 10 லட்சம் மாணவா்களும், இரண்டரை லட்சம் ஆசிரியா்களும், 93 ஆயிரம் பெற்றோரும் பிரதமா் நரேந்திர மோடியுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட பதிவு செய்தனா்.
இருப்பினும், 1500 மாணவா்களும், 250 ஆசிரியா்களும், 250 பெற்றோா்களும் தோ்வு செய்யப்பட்டு வெற்றியாளா்களாக அறிவிக்கப்பட்டனா். அவா்களில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பிரதமருடன் கலந்துரையாடினா்.
அதன்படி, தூத்துக்குடி அமிா்தா வித்யாலயத்தில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் க.ச. ஹரிஷ், பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவிகள் ர. சொா்ண காமாட்சி, ப. உமாசெல்வி மற்றும் பள்ளியின் கணித ஆசிரியை செல்வராணி ஆகியோா் பிரமதா் மோடியுடன் கலந்துரையாட தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு செய்யப்பட்ட மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியருக்கு அமிா்தா கல்வி குழுமத்தின் நிா்வாக இயக்குநா் கணபதி பிள்ளை, பள்ளியின் முதல்வா் நித்யா ஆகியோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...