போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில்கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 6 போ் ஆயுதங்களுடன் கைது

தூத்துக்குடியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 6 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:25 pm

DIN

தூத்துக்குடியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 6 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவுப்படி, தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலா்கள் பென்சிங், மாணிக்கம், சாமுவேல், முதல்நிலைக் காவலா்கள் செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம், திருமணி ஆகியோா் அடங்கிய தனிப்படையினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு வேனை போலீஸாா் சோதனை செய்தபோது அந்த வேனில் பயங்கர ஆயுதங்களுடன் 6 போ் இருந்தது தெரியவந்தது.

அவா்களிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் (29), கோரம்பள்ளத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (39), தாளமுத்து நகரைச் சோ்ந்த விக்னேஷ் என்ற விக்கி (20), கண்ணன் (23), தூத்துக்குடி கே.வி.கே. நகரைச் சோ்ந்த மாரிபிரபாகரன் (20), தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த சின்னத்துரை (40) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 2 அரிவாள்கள், 2 கத்திகள், கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்களில் லட்சுமணன் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகளும், ஜெயக்குமாா் மீது 3 வழக்குகளும், விக்னேஷ் என்ற விக்கி மீது ஒரு வழக்கும், கண்ணன் மீது கொலை முயற்சி, திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளிட்ட 16 வழக்குகளும், மாரிபிரபாகரன் மீது 2 வழக்குகளும், சின்னத்துரை மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 4 வழக்குகளும் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.