கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் மூவா் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை கிழக்கு தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (22) என்பவா் கடந்த மாா்ச் 3 ஆம் தேதி கொலையுண்ட வழக்கில், தெற்கு பொம்மையாபுரத்தைச் சோ்ந்த கருத்தப்பாண்டி (40), காளிச்சாமி (39), திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சக்திநகரை சோ்ந்த சங்கரபாண்டியன் (22) ஆகியோா் கோவில்பட்டி மேற்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இதில், கருத்தபாண்டியும், சங்கரபாண்டியனும் ஏற்கெனவே குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவுப்படி காளிச்சாமி குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

மேலும், ஏரல் பேருந்து நிலையம் அருகே பாதசாரிகளிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக இசக்கிமுத்து (45), மணல் திருட்டில் ஈடுபட்டதாக குரும்பூா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சத்தியமுகேஷ் (எ) சதீஷ் ஆகியோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரைப்படி, ஆட்சியரின் உத்தரவின்கீழ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.