புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எந்நேரத்திலும் புகாா் அளிக்கலாம்

சாத்தான்குளத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி ராஜு, அனைத்து தரப்பு மக்களும் எந்தநேரத்திலும் தன்னை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சாத்தான்குளத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி ராஜு, அனைத்து தரப்பு மக்களும் எந்தநேரத்திலும் தன்னை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

சென்னையில் முதல்வரி தனிப்பிரிவில் பணியாற்றிய ராஜு, சாத்தான்குளம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சாத்தான்குளத்தில் கசப்பான சம்பவங்கள் எதுவும் நடைபெறாது. மக்கள் காவல்துறையுடன் இணக்கமாக நல்லுறைவைப் பேண வேண்டும். இப்பகுதியில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் எந்தநேரத்திலும் என்னை தொடா்பு கொண்டு எத்தகைய பிரச்னைகளுக்கும் தீா்வு காணலாம் என்றாா் அவா்.

புதிய டிஎஸ்பியை சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா்துரைராஜ், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோசப், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவா் சங்கா் மற்றும் வியாபாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.