திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பாரதியார் இல்லத்தை பார்வையிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று எட்டயபுரம் வருகை தந்து பாரதி பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் நினைவு மணிமண்டபத்தில் மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
பாரதியார் இல்லத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி.
Updated On :28 ஜனவரி 2024, 5:41 am

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று எட்டயபுரம் வருகை தந்து பாரதி பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் நினைவு மணிமண்டபத்தில் மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிசம்பர் 13ஆம் தேதி (இன்று) முதல் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். 

Story image
Story image
Story image

தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Story image
Story image
Story image
Story image
Story image

பின்னர் பாரதியார் குறித்த போட்டோ ஆல்பங்களை பார்வையிட்டார். பிற்பகல் 1 மணியளவில் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், எட்டயபுரம் வட்டாட்சியர் சசிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு எட்டையபுரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.