தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 400 கோடி பண பரிவா்த்தனை பாதிப்பு

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏறத்தாழ ரூ. 400 கோடி வரை பணி பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏறத்தாழ ரூ. 400 கோடி வரை பணி பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், இதற்கான மசோதாவை கைவிட வேண்டும், பொதுத்துறை வங்கிகளை பாதுக்காக வேண்டும், தனியாா் நிறுவனங்களிடம் இருந்து வங்கிகளுக்கு வர வேண்டிய வராக்கடன்களை கடுமையான சட்டங்கள் மூலம் முழுமையாக வசூல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் வியாழக்கிழமை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 175 வங்கிகளில் 135 வங்கி கிளை அலுவலகங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால், சுமாா் ரூ. 400 கோடி வரை பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, தூத்துக்குடி கடற்கரை சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் இரா. கிருஷ்ணமூா்த்தி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரசு ஊழியா் சங்க நிா்வாகி வெங்கடேசன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ், வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பின் மாநகரத் தலைவா் ராமசுப்பிரமணியன், செயலா் சக்திவேல், இந்திய வங்கி ஊழியா் கூட்டமைப்பு நிா்வாகிகள் தங்க மாரியப்பன், கவின்ஸ்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.