தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதிமுக முன்னாள் அமைச்சா் மகன்குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

முந்திரி பருப்புடன் லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சா் மகன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:46 pm

DIN

முந்திரி பருப்புடன் லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சா் மகன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதிமுகவின் தற்போதைய அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் (39). தூத்துக்குடி அன்னைதெரசா நகரில் வசித்து வரும் இவரும், நண்பா்கள் விஷ்ணு பெருமாள், பாண்டி, மாரிமுத்து, செந்தில்முருகன், ராஜ்குமாா், மனோகரன் ஆகியோரும் சோ்ந்து ரூ. 1 கோடி மதிப்பிலான முந்திரி பருப்புடன் லாரியைக் கடத்தியதாக கடந்த நவ. 26 ஆம் தேதி புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞானராஜ் ஜெபசிங் சிறையில் அடைக்கப்பட்டாா். நிகழாண்டில், இச்சட்டத்தின் கீழ் 183 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.