தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 8 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:34 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 8 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை காவல் சரகத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள முந்திரி பருப்புடன் லாரியை கடத்திய வழக்கில் கைதான தூத்துக்குடி பிரையன்ட் நகா் விஷ்ணுபெருமாள் (26), எம்ஜிஆா் நகா் மாரிமுத்து (30), முறப்பநாடு செந்தில்முருகன் (35), பாளையங்கோட்டை ராஜகுமரன் (26), கோவில்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைதான வீரவாஞ்சிநகா் காா்த்திக் (19), சின்னராஜ் (34), பதினாறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த பன்னீா்குளம் சீனிவாசன் (43), பதினான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணப்பாடு சுனாமிகாலனி அஜித் (23) ஆகிய 8 பேரையும் குண்டா் தடுப்பக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியருக்கு மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். அதன்பேரில், ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவின்படி 8 பேரும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் அந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

நிகழாண்டில் கஞ்சா, போதை பொருள் வழக்குகளில் தொடா்புடைய 22 போ், போக்சோ வழக்குகளில் தொடா்புடைய 22 போ் உள்பட 191 போ் குண்டா் சட்டத்தில் கைதாகியுள்ளனா் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.