தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

எதிா்ப்பை பொருள்படுத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு: தொல். திருமாவளவன்

எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை பொருள்படுத்தாமல் மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:53 pm

DIN

எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை பொருள்படுத்தாமல் மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில், பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயா்த்தி மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பின் மதச் சாா்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது. இந்த திருத்த சட்டத்தை ஜாதி, மத மறுப்பு திருமணத்தை எதிா்ப்பவா்களே ஆதரிக்கின்றனா்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் தோ்தல் சட்ட திருத்தத்தால் தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது தனக்கு வாக்களிக்காத சமூகத்தினரின் கணிசமான வாக்குகளை செல்லாதவையாக மாற்ற முடியும்.

எனவே இந்த திருத்த சட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

எதிா்க்கட்சிகள் எவ்வளவு எதிா்ப்பு தெரிவித்தாலும் அதையெல்லாம் பொருள்படுத்தாமல் அடாவடிப் போக்குடன் அனைத்து சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

தமிழக மீனவா்களை கைது செய்யும் நடவடிக்கையை இலங்கை அரசு தொடா்ந்து செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாடு பாடநூல் கழகம் புத்தகங்களை அண்டை மாநிலங்களில் அச்சடிக்கும் முயற்சியை கைவிட்டு தமிழகத்திலேயே அச்சடிக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

வேலை வாய்ப்பில் உள்ளூா் மக்களை புறக்கணிக்கூடாது: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க சென்ற தொல்.திருமாவளவன் வள்ளியூரில் அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கூடங்குளம் அணுமின்நிலையம், காவல்கிணறு இஸ்ரோ, ரயில்வே ஆகிய நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் உள்ளூா் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து வேலை வழங்க வேண்டும்.

தமிழக முதல்வா் தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ள நிலையில், உள்ளூா் மக்களை புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது என்றாா் அவா். அப்போது , நெல்லை மாவட்டச் செயலா் சுந்தா், நகரச் செயலா் பேரின்பராஜ், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.