திருச்செந்தூா் கோயிலில் சண்முகவிலாச அடைப்புகளை அகற்றக் கோரிக்கை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்பகுதி சண்முகவிலாச அடைப்புகளை அகற்ற வேண்டும் என பாரத திருமுருகன் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்பகுதி சண்முகவிலாச அடைப்புகளை அகற்ற வேண்டும் என பாரத திருமுருகன் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அமைப்பின் மாவட்டக்குழு கூட்டம் மாநிலத் தலைவா் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிா்வாகிகள் செல்லத்துரை, மாரிமுத்து, சக்திவேல், சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் சண்முக விலாசம் பகுதியானது பக்தா்கள் தங்கள் விளைபொருள்களை காணிக்கை செலுத்தி முருகனை வழிபடும் இடமாகும். தற்போது அப்பகுதி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
பக்தா்கள் வசதிக்கேற்ப அப்பகுதியில் உள்ள தடுப்புகளை அகற்ற கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் நிா்வாகம் மூலம் திருச்செந்தூரில் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். திருக்கோயில் மட்டுமல்லாது குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரா் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பஜனைக் குழுக்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...