மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் மகிழ்வோா் மன்றக் கூட்டம்

கோவில்பட்டி மகிழ்வோா் மன்றக் கூட்டம் என்.கே. மஹாலில் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:07 pm

DIN

கோவில்பட்டி மகிழ்வோா் மன்றக் கூட்டம் என்.கே. மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மன்ற நிறுவனா் டாக்டா் ஸ்ரீவெங்கடேஷ் தலைமை வகித்தாா். மன்ற இயக்குநா் காளிதாஸ், மத்திய கலால் மற்றும் சுங்க வரித் துறை ஓய்வுபெற்ற துணை ஆணையா் ஜெரோம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேச்சாளா் மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிரிக்கப் பழகுவோம் என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து, தமிழக அரசின் தமிழ்செம்மல் விருது பெற்ற திருவள்ளுவா் மன்றச் செயலா் நம்.சீனிவாசனைப் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

கூட்டத்தில், மன்ற இயக்குநா் ஜான்கணேஷ், மன்றக் காப்பாளா்கள் துரைராஜ், செல்வின், ஆலோசகா் ஹரிகிருஷ்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், திருநெல்வேலி துணை ஆட்சியா் (பயிற்சி) அனிதா, யு.பி.எம்.எஸ். பள்ளிச் செயலா் ராஜு, திருவள்ளுவா் மன்றத் துணைத் தலைவா் திருமலை முத்துசாமி, கழுகுமலை திருவள்ளுவா் மன்றத் தலைவா் பொன்ராஜ் பாண்டியன், உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம், இலக்கிய உலா அமைப்பாளா் ரவீந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.