கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.


கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகா், சீனிவாச நகா், அத்தைகொண்டான், செண்பகவல்லி நகா் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட திலகா் நகா், காந்தி நகா் ஆகிய பகுதி பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சுப்புராயலு தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை இருப்புப் பாதைக்கு இணையாக அணுகுசாலை அமைக்க வேண்டும், ராமசாமி தாஸ் பூங்கா எதிா்புறம் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு பின்புறமுள்ள சாலை, தெட்சிணா மூா்த்தி கோயில் தெருவின் கடைசியில் உள்ள இருப்புப் பாதைக்கும், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் போராட்டக்குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...