/

மத்திய பட்ஜெட்: வா்த்தக அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தூத்துக்குடியில் உள்ள வா்த்தக அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:58 pm

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தூத்துக்குடியில் உள்ள வா்த்தக அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள இந்திய வியாபார தொழில் சங்கச் செயலா் டி. ஆா். கோடீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: இந்திய சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி கழகத்துக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவது மற்றும் பழைய மோட்டாா் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் காற்று மாசை குறைக்க புதிய திட்டம் வரவேற்கப்படுகிறது. இக்கட்டான சூழலில் நாட்டின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு தொலை நோக்கு பாா்வையுடன் தயாரிக்கப்பட்ட வரவேற்கத்தக்க நிதிநிலை அறிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அகில இந்திய வா்த்தக தொழில் சங்க தலைவா் ஜோ பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: தொழில் மற்றும் வா்த்தக மேம்பாட்டு துறைக்கு ரூ. 27,200 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். சுகாதாரம் உள்ளிட்ட 6 தூண்களை உள்ளடக்கிய சிறப்பான நிதிநிலை அறிக்கையாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.