தேசிய பெண் குழந்தைகள் தின விழா
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.


கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் முத்துமுருகன், யோகா பயிற்சியாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பத்மாவதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி, திருக்கு புத்தகத்தை பரிசாக வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற பெண் குழந்தைகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இதில், ரோட்டரி சங்க உறுப்பினா் காளியப்பன், மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிமேகலை, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் மற்றும் நன்னடத்தை அலுவலா் சுபாஷினி வரவேற்றாா். அங்கன்வாடி பணியாளா் மகேஸ்வரி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...