நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேரிக்குடியிருப்பு பள்ளியில் ரூ. 47 லட்சத்தில் வகுப்பறைகள் திறப்பு

திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பு பெருந்தலைவா் காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் தமிழக அரசு, ஊா் பொதுமக்கள் இணைந்து ரூ.47 லட்சம் மதிப்பில் மூன்று புதிய வகுப்பறைகள் 

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:12 pm

DIN

திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பு பெருந்தலைவா் காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் தமிழக அரசு, டி.வி.எஸ். சீனிவாசா சேவை அறக்கட்டளை மற்றும் ஊா் பொதுமக்கள் இணைந்து ரூ.47 லட்சம் மதிப்பில் மூன்று புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.

இதன் திறப்பு விழாவுக்கு, திருச்செந்தூா் மாவட்ட கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங், காயாமொழி ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சிவபால், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை வத்சலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், டி.வி.எஸ். சீனிவாசா சேவை அறக்கட்டளை கள இயக்குநா் சுவாமிநாதன், ஊா் தலைவா் ஐகோா்ட்துரை, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை மெட்டில்டா வரவேற்றாா். பள்ளி முதுகலை ஆசிரியா் ராபா்ட் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.