டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடி பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:33 pm

DIN

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

திருச்செந்தூா் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில் போலீஸாா் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உடன்குடி பேருந்து நிலையம் பின்புறம், வங்கி அருகில்

சோமநாதபுரத்தைச் சோ்ந்த ச. மாரியப்பன் (29), மரியம்மாள்புரத்தைச் சோ்ந்த செ. பிரசாந்த் (27) ஆகிய இருவா் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதேபோல், குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் குலசை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணன் மது பாட்டில்களை விற்பனை செய்தததும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரிடம் இருந்து 238 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.