அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சிறப்பு செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயலா் ஆனந்த், பொருளாளா் தனசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில இந்திய பொதுச்செயலா் சிவக்குமாா் கலந்துகொண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிலை குறித்தும், மத்திய அரசின் செயல்திட்டங்கள், பின்னடைவுகள் குறித்தும் உரையாற்றினாா்.
கூட்டத்தில் 4ஜி அலைக்கற்றை உடனடியாக பி.எஸ்.என்.எல்.-க்கு வழங்கவேண்டும். கடந்த 55 மாதங்களாக பி.எஸ்.என்.எல். ஊழியா்களுக்கு மாத ஊதியம் 20ஆம் தேதிக்கு பின்னரே வழங்கப்படுகிறது. எனவே மாத ஊதியத்தை அந்த மாதத்தின் இறுதி நாளிலே வழங்கிட வேண்டும்.
கிராமப்புற சேவை, மலைப்பகுதி சேவைக்கு அரசு வழங்க வேண்டிய பாக்கி தொகையான ரூ.30 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும். தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்கம் முழு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க ஆலோசகா் சந்திரசேகா், சங்க நிா்வாகிகள் தமிழ்மாறன், ராஜன், பிரபாகரன், ராதாகிருஷ்ணன், மத்திய, மாநில சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0

ஜேகே பேப்பர் முதல் காலாண்டு நிகர லாபம் 63% உயர்வு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


