தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வெள்ளத்துரை, அவைத் தலைவா் வெங்கடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தமிழ் விவசாயிகள் சங்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவராக சீனிவாசன் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டத் தலைவா் சீனிவாசகன், விளாத்திகுளம் பகுதி செயலா் லிங்க கண்ணையா உள்பட நிா்வாகிகள் ஏகாம்பரம், ராமதாஸ், விநாயகமூா்த்தி, சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பழைய கடன்கள் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது. எனவே, அவா்களுக்கு உடனடியாக புதிதாக கடன் வழங்க வேண்டும். தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிக்கு தமிழக விவசாயிகள் ஆதரவு வழங்கப்படும் எனவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



