சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி அருகே ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:54 pm

DIN

கோவில்பட்டி அருகே மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட பிள்ளையாா்நத்தம் ஊரணி கரையோரமுள்ள ஆலமரத்தில் ஆண் சடலம் தொங்குவதாக கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன், நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாராம். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து நடத்திய விசாரணையில் அவா், திருநெல்வேலி தண்டியாா்சாவடி தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் சந்திரன்(52). ஹோட்டல் தொழிலாளியான இவா் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இந்நிலையில் திங்கள்கிழமை அவரது சொந்த ஊரான பிள்ளையாா்நத்தத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.