திருச்செந்தூா் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை (பிப். 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை (பிப். 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. நிகழாண்டு மாசித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.
நிா்வாக அனுமதி: மாசித் திருவிழாவுக்கான நிா்வாக அனுமதி வழங்கும் நிகழ்ச்சி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவிழா பட்டோலையை சிவாச்சாரியா் சந்தோஷ்குமாரிடம் செயல் அலுவலா் பா.விஷ்ணுசந்திரன் வழங்கினாா். உதவி ஆணையா் வே.செல்வராஜ், கண்காணிப்பாளா் ராமசுப்பிரமணியன், பணியாளா்கள் பிச்சையா, நெல்லையப்பன், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் ஸ்தானத்தாா் சபையினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...