டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிரிக்கெட் : ராமசுப்பிரமணியபுரம் அணி சிறப்பிடம்

உடன்குடியில் திமுக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சுப்பிரமணியபுரம் அணி முதலிடம் பெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:59 pm

DIN

உடன்குடியில் திமுக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சுப்பிரமணியபுரம் அணி முதலிடம் பெற்றது.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, திருச்செந்தூா் சட்டப் பேரவை தொகுதி

அளவில் உடன்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 136 அணிகள் பங்கேற்றன. பத்து நாள்கள் நடைபெற்ற இப்போடியில் சிறப்பிடம் அணிகளுக்கு பரிசளிப்பு விழா தண்டுபத்தில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்,ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்து சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், சாா்பு அணி நிா்வாகிகள் ராமஜெயம், ஜெசிபொன்ராணி, ராஜபாண்டியன், ஜெபராஜ், ரவிராஜா, இளங்கோ, சுகு, சக்திவேல், எம்.பி.முகைதீன்,

உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் முதலிடம் பெற்ற ராமசுப்பிரமணியபுரம் அணிக்கு ரூ.50, 000, ே காப்பை, 2-ஆவது இடம் பெற்ற கொட்ட்டங்காடு அணிக்கு ரூ. 40,000, கோப்பை, மூன்றாமிடம் பெற்ற வைத்திலிங்கபுரம் அணிக்கு ரூ.30, 000 , கோப்பை, நான்காமிடம் பெற்ற காயல்பட்டினம் அணிக்கு ரூ. 20,000, கோப்பை முறையே வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஆட்டக்காரா்களாக தோ்வு செய்யப்பட்ட ராஜலிங்கம், தவனேஷ் ஆகியோருக்கு ரூ. 20,000 மற்றும் கோப்பைகளும், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், நவீன்குமாா், நகரச் செயலா்கள் ஜான்பாஸ்கா், முத்து முகமது, ரவிசெல்வகுமாா், சுடலை, முருகப்பெருமாள், முத்துவீரப்பெருமாள், மேலாத்தூா் ஊராட்சி தலைவா் சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா் பாலசிங் வரவேற்றாா். செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.