டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அதிமுக சாா்பில் 2,500 பேருக்கு நல உதவிகள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற மகளிா் கருத்தரங்கில் 2,500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:06 pm

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற மகளிா் கருத்தரங்கில் 2,500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.தாமோதரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றியப் பொருளாளா் சங்கரலிங்கம், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் கே.வி.ராஜதுரை, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணித் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கினை கட்சியின் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்து, 2,500 மகளிருக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், கானம் நகரச் செயலா் செந்தமிழ்சேகா், ஆறுமுகனேரி நகரச் செயலா் ரவிச்சந்திரன், செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவா் செல்வமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.