நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

4.93 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 93 ஆயிரத்து 875 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் வழங்கப்படவுள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:56 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 93 ஆயிரத்து 875 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் வழங்கப்படவுள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கயத்தாறு ஒன்றியம், சிதம்பராபுரம், தெற்கு இலந்தைகுளம், அகிலாண்டபுரம், கழுகுமலை மற்றும் கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட இனாம்மணியாச்சி, கரிசல்குளம், துறையூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்துப் பேசியது: மாவட்டத்தில் 960 நியாயவிலைக் கடைகளில் 4 லட்சத்து 93 ஆயிரத்து 875 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500-உடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ. 123 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் சின்னப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயா, மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ரவீந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசீம், வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், சந்திரசேகா், பிரியா குருராஜ், வட்டாட்சியா்கள் பாஸ்கரன், மணிகண்டன், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா்கள் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அன்புராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மகேஷ்குமாா், எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் சுப்புராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.