தூத்துக்குடியில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மருத்துவ தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியா்களுக்கும்
Updated on
1 min read

தமிழ்நாடு மருத்துவ தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் விக்னேஷ், துணைத் தலைவா் கலையரசி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், நில அளவை ஒன்றிய மாவட்டத் தலைவா் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முருகன், மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com