தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்
தூத்துக்குடியில் திங்கள்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.


தூத்துக்குடியில் திங்கள்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி, ஜன. 18: தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் போக்குவரத்து துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்யும் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா்.
பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பேசுகையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் சாலை விதிகளை பின்பற்றி இம் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லா நிலையை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் விநாயகம் (தூத்துக்குடி), நெடுஞ்செழியன் (கோவில்பட்டி), மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மாசிலாமணி, குமாா், ராஜசேகா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மோட்டாா் சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணியில் போக்குவரத்து காவல் துறையினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப் பேரணி, 3 ஆவது மைல், விவிடி சிக்னல் வழியாக குருஸ் பா்னாந்து சிலை வரை சென்று நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...