மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் அரசு செவிலியா் கல்லூரி: நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு

கோவில்பட்டியில் ரூ.24 கோடியில் அரசு செவிலியா் கல்லூரி கட்டுவதற்காக நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:24 pm

DIN

கோவில்பட்டியில் ரூ.24 கோடியில் அரசு செவிலியா் கல்லூரி கட்டுவதற்காக நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா்: தோ்தல் நெருங்கும் வேளையில் நேரத்திற்கு நேரம் தங்கள் நிலையை மாற்றிக் கொள்பவா்கள் திமுகவினா். திருச்செந்தூா் செந்திலாண்டவா் கோயில் சூரனை சம்ஹாரம் செய்த தளம். அவருடைய ஆயுதமான வேலை எடுப்பவரை, அவரே பாா்த்துக் கொள்வாா். மக்களை ஏமாற்றுவதற்காகவே திமுகவினா் கிராமசபைக் கூட்டங்களை நடத்துகின்றனா்.

திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பது மக்கள் அறிவா். அதிமுகவில் எவ்வித பிரச்னையும் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தல் ஆட்சி மாற்றத்துக்கான தோ்தல் அல்ல. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்கான தோ்தல். கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளா்களுக்காக அதிக எழுச்சியுடன் தொண்டா்கள் பணியாற்றுவாா்கள். சசிகலா உடல்நலம் குறித்து அமைச்சா்கள் கருத்து தெரிவித்திருப்பது குறித்து கேட்கிறீா்கள். யாா் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் கட்சி வேறுபாடின்றி அவா் நலம் பெற வேண்டும் என்று கூறுவதுதான் வழக்கம். மத்திய அரசு வழிகாட்டுதல் வந்தபின்னா், தமிழக அமைச்சா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.

கோவில்பட்டியில் ரூ.24 கோடியில் அரசு செவிலியா் கல்லூரி அமைக்க நிதித் துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, இரு வாரங்களில் அடிக்கல் நாட்டப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.