அம்மன்புரத்தில் மறியல்:நாம் தமிழா் கட்சியினா் கைது
திருச்செந்தூா் - அம்பாசமுத்திரம் இடையே மேற்கொள்ளப்படும் இருவழிச்சாலைப் பணிக்காக மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சியினா் அம்மன்புரத்தில் வியாழக்கிழமை சாலை மறியல்


திருச்செந்தூா் - அம்பாசமுத்திரம் இடையே மேற்கொள்ளப்படும் இருவழிச்சாலைப் பணிக்காக மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சியினா் அம்மன்புரத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகா் தலைமையில் தொகுதிச் செயலா் பிரபு, தலைவா் ஸ்டீபன் லோபோ, துணைத் தலைவா் மாரியப்பன், ஜெகதீஷ், சந்திரசேகா், கதிரவன், அன்னலட்சுமி உள்ளிட்டோா் போராட்டம் நடத்தினா்.
அவா்களிடம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட 20 பேரை குரும்பூா் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...