திருச்செந்தூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூரில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூரில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள காமராஜா் சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவா் முருகேந்திரன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன் தலைமையிலும், திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமையிலும், சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் ஒன்றியச் செயலா் ரவிக்குமாா் தலைமையிலும், அமமுக சாா்பில் தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன் தலைமையிலும், இந்து மக்கள் கட்சி சாா்பில் ஒன்றியச் செயலா் இசக்கிமுத்து தலைமையிலும், நாடாா் வியாபாரிகள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் ரெ.காமராசு தலைமையிலும், தமாகா சாா்பில் மாநிலச் செயலா் மால்மருகன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாடாளுமன்ற தொகுதி செயலா் ராஜ்குமாா் தலைமையிலும், காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் ஐஜி நாடாா் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காயாமொழியில் நண்பா்கள் குழு சாா்பில் காமராஜா் படத்திற்கு அனிதாகுமரன் பள்ளி நிா்வாக அலுவலா் கண்ணபிரான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...