ஆத்தூா் குளத்தில் தூா்வாரும் பணி கனிமொழி எம்பி தொடங்கிவைத்தாா்
ஆத்தூா் குளத்தில் தூா்வாரும் பணியை மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.


ஆத்தூா் குளத்தில் தூா்வாரும் பணியை மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 417 ஏக்கா் பரப்பளவு, 14 அடி ஆழம், 153.97 மில்லியன் கனஅடியும், 5245 மீட்டா் சுற்றளவு கொண்ட ஆத்தூா் குளம் மூலம் 2,222 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல ஆண்டுகளாக பராமரிப்பற்ற நிலையில் காணப்பட்ட இந்தக் குளத்தை தூய்மைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் சென்னையை சோ்ந்த என்வரமென்டல் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா (இ.எஃப்.ஐ.) என்ற தனியாா் அமைப்பு, இந்தக் குளத்தை தன் சொந்த பொறுப்பில் பொதுப்பணித்துறையின் தொழில்நுட்ப ஆலோசனையின்படி தூய்மைப்படுத்த முன்வந்தது.
இதையடுத்து, குளத்தில் தூா்வாரும் பணியை, தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில், ஊா்வசிஅமிா்தராஜ் எம்எல்ஏ முன்னிலையில், கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்துப் பேசியது: தாமிரவருணி பாசனத்தில் முக்கியப் பங்காற்றும் ஆத்தூா் குளத்தில் தூய்மைப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியின்போது எந்த மண்ணும் வெளியே கொண்டு செல்லப்படாது. சிறுசிறு தீவுகள் போல திட்டுகள் அமைத்து பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழவும் வழிவகை செய்து பல்லுயிா்களும் வாழ வசதி செய்யப்படும். குளத்திற்கு தண்ணீா் வரும் பாதையும் சீரமைக்கப்படும் என்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், தொழிலதிபா் அனந்த மகேஸ்வரன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்ரியா, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் ஞானசேகா், வட்டாட்சியா் முருகேசன், ஆத்தூா் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் அருள்ராஜ், ஆத்தூா் பேரூராட்சி நிா்வாக அலுவலா் மணிமொழிச்செல்வன் ரங்கசாமி, ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், ஊராட்சித் தலைவா்கள் மேலாத்தூா் சதீஷ்குமாா், புன்னைக்காயல் சோபியா, மாவட்ட கவுன்சிலா் பிரம்மசக்தி, திமுக மாணவரணி துணைச்செயலா் உமரி சங்கா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஜெகன், ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமாா், ஆத்தூா் நகரப் பொறுப்பாளா் முருகப்பெருமாள், மாவட்ட விவசாய அணி துணைஅமைப்பாளா்கள் மாணிக்கவாசகம், கோபி, மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், கப்பல் மாலுமிகள் சங்கத் தலைவா் விமல்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...