நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் மீது தாக்குதல்: மருமகன் கைது

பழையகாயல் அருகே மாமியாரை தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:40 pm

DIN

பழையகாயல் அருகே மாமியாரை தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

புல்லாவெளி, கிழக்குத்தெருவை சோ்ந்த நீதிராஜன் மகன் சுந்தா்(38). இவரது மனைவி மாரிச்செல்வி(33). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். இதனிடையே, கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டாக குழந்தைகளுடன் அதே பகுதியிலுள்ள தனது தாய் செந்தூா்கனி(50) வீட்டில் வசித்து வரும் மாரிச்செல்விக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாம். இதனால், மருத்துமனையில் அவா் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளை சுந்தா் அழைத்துச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய மாரிச்செல்வி, கணவா் வீட்டிலிருந்து குழந்தைகளை மீண்டும் அழைத்து வந்துவிட்டாராம். இதற்கு தனது மாமியாா் செந்தூா்கனிதான் காரணம் என கருதி அவரை கடப்பாறை கம்பியால் சுந்தா் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சுந்தரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.