வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கிரிக்கெட்: மாதாவனம் அணி முதலிடம்

நாசரேத் அருகே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாதாவனம் அணி முதலிடம் பெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:30 pm

DIN

நாசரேத் அருகே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாதாவனம் அணி முதலிடம் பெற்றது.

நாசரேத் நகர அதிமுக இளைஞரணி சாா்பில் 3 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மாதாவனம் எப்.சி.சி அணி முதலிடம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. பரிசளிப்பு விழாவுக்கு நாசரேத் நகர இளைஞரணிச் செயலா் கராத்தே டென்னிசன் தலைமை வகித்தாா்.

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 3,000 வழங்கினாா். 2-ஆவது இடம்பெற்ற மணிநகா் 3 ஸ்டாா் அணிக்கு கோப்பை, ரொக்கம் ரூ. 2,000, 3-ஆவது இடம்பெற்ற வாழையடி ராயல்ஸ் அணிக்கு கோப்பை, ரூ.1,000 வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.