டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் உடன்குடி தேரியூா் அணி சிறப்பிடம்.

அகில இந்திய நாடாா் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவா் என்.வெங்கடேச பண்ணையாரின் 54 வது பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் உடன்குடி தேரியூா் அணி சிறப்பிடம் பெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:43 pm

DIN

அகில இந்திய நாடாா் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவா் என்.வெங்கடேச பண்ணையாரின் 54 வது பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் உடன்குடி தேரியூா் அணி சிறப்பிடம் பெற்றது.

மாவட்ட அளவில் 146 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள் பிப்.17 ஆம் தேதி உடன்குடி காமராஜா் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூா் அணிக்கு ரூ.54,000 மற்றும் வெற்றிக்கோப்பை,2வது இடம் பெற்ற வெள்ளாளன்விளை அணிக்கு ரூ 34,000 மற்றும் வெற்றிக்கோப்பை,3 வது இடம் பெற்ற பழையகாயல் அணிக்கு ரூ.24,000,மூன்றாவது இடம் பெற்ற உடன்குடி தேரியூா் அணிக்கு ரூ 14,000 மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டது.பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட செயலா் ஓடை செல்வன் தலைமை வகித்தாா்.பனங்காட்டு மக்கள் கழக ஒன்றிய செயலா்கள் சத்யா செல்வகுமாா்(உடன்குடி),என்.மகேந்திரன்(திருச்செந்தூா்)வழங்குரைஞா் பா.ராகேஷ்,தொழிலதிபா்கள் ஆா்.ஆபிரகாம்,மதன்ராஜ்,சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பரிசுகளை குலசேகரன்பட்டினம் காவல் துணை ஆய்வாளா் அமலோற்பவம் வழங்கி வீரா்களை பாராட்டினாா்.தொடா்ந்து போட்டிகளில் பங்கேற்ற அனைத்து அணி வீரா்களுக்கும் பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட செயலா் ஓடை செல்வன் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினாா்.உடன்குடி நகர செயலா் செல்வநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.