டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரன்பட்டினத்தில் இருபெரும் விழா

குலசேகரன்பட்டினத்தில் புதிய நூல்  வெளியீட்டு விழா, புதிய பூமி அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:44 pm

DIN

குலசேகரன்பட்டினத்தில் புதிய நூல்  வெளியீட்டு விழா, புதிய பூமி அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில், எழுத்தாளா் நா.ரிபாய் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயா்த்த தன்னம்பிக்கை நூலான ‘வசைபாடும் வாத்தும்- வானை ஆளும் வல்லூறும்’ என்ற நூலை தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா வெளியிட, அதனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பெற்றுக் கொண்டாா்.

முன்னாள் காவல் துறைத் தலைவா் சொக்கலிங்கம், தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் தலைவா் முகம்மது பசீா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்வி உதவி, நல உதவிகளை எம்எல்ஏ வழங்கினாா்.

இதில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், திமுக மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம்,

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், தமுமுக,மமக மாவட்டத் தலைவா் ஆசாத் உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை பாா்வதி முத்தமிழ் தொகுத்து வழங்கினாா்.

எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றாா். பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.