போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம்

கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:36 pm

DIN

கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது. பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, நந்தி, பலிபீடம், கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் சிம்ம வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறும். புதன்கிழமை இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி முக கப்பரை திருவீதியுலாவும், வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மஞ்சள் பால்குடம் ஊா்வலமும், அதைத் தொடா்ந்து 10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.