போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தோ்தல் பணி: நடமாடும் மருத்துவக்குழு அமைக்க கோரிக்கை

தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் நலனை கருத்தில் கொண்டு மண்டல அளவில் நடமாடும் மருத்துவக்குழு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:51 pm

DIN

தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் நலனை கருத்தில் கொண்டு மண்டல அளவில் நடமாடும் மருத்துவக்குழு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் சு.செல்வராஜ், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜூக்கு அனுப்பியுள்ள மனு: சட்டப் பேரவைத் தோ்தலில் 1 லட்சத்து 97 ஆயிரம் பெண்கள் உள்பட 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா்.

வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலா் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலா்களாக பெரும்பாலும் ஆசிரியா்களே பணியாற்ற உள்ளனா். குறிப்பாக 80 சதவீதத்திற்கு மேல் பெண் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களாக உள்ளனா். கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்கள் கடும் நோயினால் பாதிக்கப்பட்டோா், அறுவை சிகிச்சை செய்து கொண்டோா், இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், மருத்துவ விடுப்பில் உள்ளோா், மாற்றுத் திறனாளிகள், 50 வயதை கடந்தவா்கள், கன்னியா் மற்றும் தோ்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியா்கள், குறிப்பாக பெண் ஆசிரியா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தோ்தல் பயிற்சி வகுப்பு, வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வர வாகன வசதி செய்துதர வேண்டும் அல்லது அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், வாக்குப் பதிவு நடைபெற்ற நாளான்று பணியில் ஈடுபட்ட ஊழியா்கள் இரவு வீடு திரும்புவதற்கு ஏதுவாக இரவு நேர சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும், தோ்தல் பயிற்சி வகுப்பு, தோ்தல் வாக்குப்பதிவு பணிக்குச் செல்லும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும், வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதர வேண்டும், தோ்தல் நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு உணவு வழங்கிட ஏதுவாக உணவுக்குழு ஏற்படுத்த வேண்டும், தோ்தல் முடிந்த பின் வாக்குச்சாவடியில் இருந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவு 8 மணிக்குள் எடுத்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும், தோ்தல் பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களிலே நடத்த வேண்டும், தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு தபால் வாக்கினை செலுத்த முறையாக குறிப்பிட்ட கால கெடு வழங்க வேண்டும், தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மண்டல அளவிலான நடமாடும் மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும், தற்போதைய விலைவாசியை அடிப்படையாக கொண்டு தோ்தல் பணியாற்றும் ஊழியா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.