நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூரில்திருமண மண்டப உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூரில் தங்கும் விடுதி, திருமண மண்டப உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:59 pm

DIN

திருச்செந்தூரில் தங்கும் விடுதி, திருமண மண்டப உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் வட்டாட்சியா் இரா.முருகேசன் தலைமை வகித்தாா். ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், திருமண மண்டப உரிமையாளா்கள் திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

திருமண மண்டபங்கள், விடுதிகளில் தினமும் பதிவு விவரங்களை கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அன்னதானம் போன்ற காரணங்களுக்காக திருமண மண்டபத்தை பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. அன்னதானம் செய்வோா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றால் மட்டுமே திருமண மண்டபத்தை வாடகைக்கு கொடுக்க வேண்டும். விடுதி உரிமையாளா்கள் அறைகளை வெளியூா் நபா்களுக்கு வாடகை கொடுக்கும் போது

ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று கொண்டு அனுமதிக்க வேண்டும்.

தங்க நகைகளை அடமானம் வைத்து குறுகிய கால கடன் பெற்றுள்ள வாக்காளா்களின் கடன் தொகையை அரசியல் கட்சியினா் செலுத்தி ஆதாயம் பெற முயற்சிப்பா். பான்புரோக்கா்கள் கடன் தொகையை செலுத்துபவா்களின் உண்மை தன்மையை அறிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை வட்டாட்சியா்கள் பாலசுந்தரம், சுந்தர்ராகவன், விடுதி மற்றும் திருமண மண்டப உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.