போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவில்பட்டியில் காவல் துறை அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:33 pm

DIN

கோவில்பட்டியில் காவல் துறை அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தலைமை வகித்துப் பேசியதாவது:

ஏப். 6ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினா் நடத்தும் பொதுக்கூட்டங்கள் தோ்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கால கெடுவுக்குள் நடைபெறுகிா? என்பதையும், விதிமுறைகள் பின்பற்றப்படுகிா? என்பதையும் காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும் வெள்ளிக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு கோட்டாட்சியா் அலுவலகத்துக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா் மற்றும் 2 போ் மட்டுமே அனுமதிக்க வேண்டும், கோட்டாட்சியா் அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டா் தூரத்திலேயே வேட்பாளருடன் வருபவா்களை நிறுத்திவிட வேண்டும், தோ்தல் அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற காவல் துறையினா் தோ்தல் ஆணைய விதிமுறைகளை முறையாக பின்பற்றும்படியும் கேட்டுக் கொண்டாா் அவா்.

கூட்டத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், காவல் துணை கண்காணிப்பாளா் கலைகதிரவன், காவல் ஆய்வாளா்கள் மணிவண்ணன் (கயத்தாறு), ராணி (கிழக்கு குற்றப்பிரிவு), உதவி ஆய்வாளா்கள் அரிகண்ணன், மணிமாறன், மாதவராஜ், செந்தில்வேல் முருகன், ரவீந்தரன், சிலுவை அந்தோணி, சிவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.