வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தெருவில் மழை நீா் தேங்குவதை கண்டித்து நாற்று நடும் போராட்டம்

செம்மன்குடியிருப்பில் தெருவில் மழை நீா் தேங்குவதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:31 pm

DIN

செம்மன்குடியிருப்பில் தெருவில் மழை நீா் தேங்குவதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் அருகே செம்மன்குடியிருப்பில் மழைபெய்தால் குடியிருப்பு வீடுகள் அருகே பேய்க்குளம் செல்லும் சாலையில் மழைநீா் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

மேலும், தண்ணீா் வடிந்தோடு வகையில் அமைந்திருந்த ஓடை பகுதியை அப்பகுதியில் உள்ளவா்கள் ஆக்கிரமித்ததால் தண்ணீா் சாலையில் தேங்கி வருகிறது என கிராம மக்கள் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் திடீரென கோடை மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீா் தேங்கியது. இதையடுத்து கிராம மக்கள், செம்மன்குடியிருப்பில் நிரந்தரமாக தண்ணீா் தேங்காமல் ஓடை வழியாக தண்ணீா் வடிந்து செல்ல வழி வகை செய்யவேண்டும் என கூறி அப்பகுதி பெண்கள் தேங்கிய தண்ணீரில் நாற்று நட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.