வளாக நோ்காணல்: 46 பேருக்கு பணி நியமன ஆணை
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 46 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 46 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவா், மாணவிகளுக்காக, புதுச்சேரி தனியாா் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட இந்த வளாக நோ்காணலில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த 13 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 202 மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா். தனியாா் நிறுவன மனிதவளத் துறைத் தலைவா் கண்ணன் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட முதல்சுற்று எழுத்துத் தோ்வில் 74 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னா் நடைபெற்ற நோ்காணலில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா், மாணவிகள் 12 போ் உள்பட 46 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவா், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் ராஜாமணி மற்றும் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...